சமையல்
முளைக்கட்டிய பயறு சூப்

எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவும் முளைக்கட்டிய பயறு சூப்

Published On 2022-02-10 05:23 GMT   |   Update On 2022-02-10 05:23 GMT
பருவ கால நிலைக்கு இதமாக சூடான சூப் வகைகளை வீட்டில் தயாரித்து பருகலாம். இன்று முளைக்கட்டிய பயறு வகைகளை சேர்த்து சூப் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

முளைக்கட்டிய பயறு வகைகள் (ஏதாவது 5 சேர்ந்தது) - அரை கப்
வெங்காயம் - 1
பூண்டு - 3 பல்
சீரகம் - அரை டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
தேங்காய்ப் பால் - கால் கப்
புளிக்காத கெட்டி தயிர் - கால் கப்
தனியா - அரை டீஸ்பூன்
மிளகு - சிறிதளவு
கொத்தமல்லிதழை - சிறிதளவு
உப்பு - தேவைக்கு

செய்முறை:

கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

முளைக்கட்டிய பயறை வேகவைத்துக் கொள்ளவும்.

பின்னர் கொஞ்சம் வேகவைத்த பயறுடன், பூண்டு, வெங்காயம், தனியா, சீரகம், மிளகு, கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மிக்சியில் அரைத்த விழுதை போட்டு பச்சை வாசம் நீங்கும் வரை வதக்கவும்.

பின்னர் அதனுடன் மீதமுள்ள பயறு, உப்பு, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

கொதிக்க தொடங்கியதும் தேங்காய்ப் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

பின்னர் கெட்டி தயிர், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும்.

இறுதியில் கொத்தமல்லி தழை தூவி பருகலாம்.
Tags:    

Similar News