ஆன்மிகம்
திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழா(கோப்பு படம்)

திருவனந்தபுரம் நவராத்திரி விழாவுக்கு சாமி சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்ல கோரிக்கை

Published On 2020-10-06 06:51 GMT   |   Update On 2020-10-06 06:51 GMT
திருவனந்தபுரம் நவராத்திரி விழாவுக்கு பாரம்பரிய முறைப்படி சாமி சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விசுவ இந்து பரிஷத்தின் பூசாரிகள் பேரமைப்பின் குமரி மாவட்ட கூட்டம் மேல்புறம் அருகே உள்ள தர்மசாஸ்தா கோவிலில் நடந்தது. இதற்கு பேரமைப்பு மாவட்டத் தலைவர் சசிகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தார்.ராபி, சுரேந்திரன், சசிதரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவுக்கு குமரியில் இருந்து பாரம்பரிய முறைப்படி சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன், சரஸ்வதி, குமாரகோவில் முருகன் ஆகிய சாமி சிலைகள் ஊர்வலம் நடைபெறும்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்றை காரணம் காட்டி ஊர்வலம் குறித்து பல்வேறு கருத்துகள் உலா வருகின்றன. இதில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலையிட்டு பாரம்பரிய முறைப்படி சாமி சிலைகளை ஊர்வலமாக கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கோரிக்கை மனு கலெக்டர் பிரசாந்த் வடநேரே மற்றும் தேவசம்போர்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.
Tags:    

Similar News