செய்திகள்

கொடநாடு பிரச்சினையில் முதல்-அமைச்சர் மீது எதிர்கட்சிகள் ஆதாரமற்ற குற்றச்சாட்டு - பொன்.ராதாகிருஷ்ணன்

Published On 2019-01-16 11:38 GMT   |   Update On 2019-01-16 12:37 GMT
கொடநாடு பிரச்சினையில் முதல்-அமைச்சர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்கட்சிகள் கூறி வருகின்றனர் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #KodanadEstate

பழனி:

பழனியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வலிமையான கூட்டணி அமைத்து போட்டியிடும். தமிழகத்தில் 80 சதவீத இடங்களை கைப்பற்றுவோம். கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்கட்சிகள் கூறி வருகின்றனர்.

சமீப காலமாகவே மக்கள் திட்டங்களுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு அதிகரித்து வருவது துரதிர்ஷ்டவசமானது. நீண்ட கால தொழிற்சாலைகள் மூடப்படுவதால் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். இதற்கு எல்லாம் மக்கள் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் என்று செயல்படும் சில தீய சக்திகள்தான் காரணம்.

தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுக்கு தமிழக அரசு உரிய வசதிகள் செய்து கொடுத்து அவர் நேர்மையாக செயல்பட அதிகாரங்கள் வழங்க வேண்டும்.

பிரதமர் மோடி குறித்து கெஜிரிவால் விமர்சனம் செய்வது கண்டனத்திற்குறியது. ஒரு மாநிலத்தில் கூட ஒழுங்காக ஆட்சி செய்ய முடியாத அரவிந்த்கெஜிரிவால் ஒரு நாட்டையே வழிநடத்தி செல்லும் பிரதமரையே தரம் தாழ்த்தி விமர்சனம் செய்கிறார். வரும் தேர்தலோடு அவர் காணாமல் போய்விடுவார்.

இவ்வாறு அவர் கூறினார். #KodanadEstate

Tags:    

Similar News