தொழில்நுட்பம்
ட்விட்டர்

வாய்ஸ் மெசேஜ் வசதி வழங்கும் ட்விட்டர்

Published On 2020-09-25 05:39 GMT   |   Update On 2020-09-25 05:39 GMT
ட்விட்டர் டைரக்ட் மெசேஜ் சேவையில் வாய்ஸ் மெசேஜ் வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


ட்விட்டர் சேவையில் வாய்ஸ் ட்வீட்ஸ் எனும் புதிய அம்சம் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அம்சம் பயனர்கள் ஆடியோ மெசேஜ் மூலம் தங்களது கருத்துக்களை பதிவிட முடியும். 

தற்சமயம் இந்த அம்சத்தை நீட்டித்து ட்விட்டர் டைரக்ட் மெசேஜஸ் சேவையில் வாய்ஸ் மெசேஜ் அனுப்ப வழி செய்கிறது. இதற்கான இன்டர்பேஸ் வாய்ஸ் ட்வீட்ஸ் அம்சத்திற்கு வழங்கப்பட்டதை போன்றே காட்சியளிக்கிறது. 



ட்விட்டரில் ஒருவருக்கு டிஎம் செய்யும் போது, வலது புறத்தில் டெக்ஸ்ட் பாக்ஸ் காணப்படும். அதனை க்ளிக் செய்ததும் வாய்ஸ் மெசேஜை உருவாக்க முடியும். இவ்வாறு செய்யும் போது, ஆடியோ ரெக்கார்டிங் நிறுத்துவதற்கான ஆப்ஷன் வழங்கப்படுகிறது. 

மேலும் வாய்ஸ் மெசேஜை அனுப்பும் முன், அதனை சரிபார்க்கும் வசதியும் வழங்கப்படுகிறது. இதனால் ரெக்கார்ட் செய்த ஆடியோவை ஒருமுறை முழுமையாக கேட்டு, பின் அதனை அனுப்ப முடியும். மறுபுறம் ஆடியோ மெசேஜை பெறுபவர், அதனை பிளே / பாஸ் செய்து கேட்கலாம்.

முதற்கட்டமாக இந்த அம்சம் பிரேசில் நாட்டில் சோதனை செய்யப்படுகிறது. சோதனை வெற்றிகரமாக நிறைவுற்றால், சர்வதேச அளவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கலாம். இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் தங்களின் டிஎம் சேவையில் வாய்ஸ் மெசேஜ் வசதியை ஏற்கனவே வழங்கி வருகின்றன.
Tags:    

Similar News