தமிழ்நாடு
.

7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 9 மாணவிகள் பெயரை சேர்க்க நடவடிக்கை

Published On 2022-01-27 11:26 GMT   |   Update On 2022-01-27 11:26 GMT
சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவிகள் 9 பேரை மருத்துவ படிப்புக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சேலம்:

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை அடுத்த கரிக்காபட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி. தறி தொழிலாளி. இவரது மகள் கஸ்தூரி (19), ஜலகண்டாபுரம் அரசு மக ளிர் மேல்நிலைப் பள்ளியில் எம்.பி.சி. பிரிவில் பிளஸ் 2 படித்தார். இவர் 'நீட்' தேர்வில் 252 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். 

இதனிடையே இவரது பெயர் பொது தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றிருந்தது.எனவே, மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குரிய 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் தன்னுடைய பெயரையும் சேர்க்க பரிந்துரைக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். 

அதன்பேரில் அவரது மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், 7.5 சதவீத இட ஒதுக் கீட்டில் சேர்க்க தமிழக அரசுக்குப் பரிந்துரைத்தது. இதேபோல் சேலம் மாவட்டத்தில் 9 மாணவிகள் தங்களது பெயரை மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில்சேர்க்கக் கோரி மனு அளித்துள்ளது தெரிய வந்துள்ளது.

அந்த மனுக்களையும் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்க்கக் கோரி தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News