செய்திகள்
தடம்புரண்ட ரெயில்

பனிமூட்டத்தால் ரெயில்கள் மோதல்- விரைவு ரெயில் தடம்புரண்டு 25 பேர் காயம்

Published On 2020-01-16 04:23 GMT   |   Update On 2020-01-16 04:23 GMT
ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே விரைவு ரெயில் தடம்புரண்டதில் 25 பேர் காயமடைந்தனர். பனிமூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.
புவனேஸ்வர்:

ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலையில் விபத்துக்குள்ளாகி தடம்புரண்டது. கட்டாக் மாவட்டம் சாலாகோன்-நெற்குந்தி ரெயில் நிலையங்களுக்கு இடையே, சரக்கு ரெயில் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதால், எக்ஸ்பிரஸ் ரெலியின் 5 பெட்டிகள் தடம்புரண்டன. 

இதில் சுமார் 25 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 



கடுமையான பனிமூட்டம் காரணமாக முன்னால் சென்ற சரக்கு ரெயில் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கூறி உள்ளனர். ஆனால் விபத்துக்கு பனிமூட்டம் தான் காரணம் என்பது உறுதி செய்யப்படவில்லை. இதுபற்றி விசாரணை நடத்தப்படுகிறது.
Tags:    

Similar News