தொழில்நுட்பம்
ஒப்போ ஏ9 2020

ஒப்போ ஏ9 2020 வெனிலா மின்ட் எடிஷன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-11-30 08:11 GMT   |   Update On 2019-11-30 08:13 GMT
ஒப்போ நிறுவனம் 8 ஜி.பி. ரேம் கொண்ட ஏ9 2020 வெனிலா மின்ட் எடிஷன் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ஏ9 2020 ஸ்மார்ட்போனின் வெனிலா மின்ட் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் கிரேடியன்ட் வைட் டியல் நிற ஸ்மார்ட்போன் ஆஃப்லைன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஏ9 2020 வெனிலா மின்ட் எடிஷன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி எனும் ஒற்றை வேரியண்ட்டில் கிடைக்கிறது.

புதிய வென்னிலா மின்ட் எடிஷன் பற்றி ஒப்போ இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறது. புதிய நிறம் தவிர மரைன் கிரீன்,  ஸ்பேஸ் பர்ப்பிள் மற்றும் வைட் டியல் நிறங்களில் கிடைக்கிறது. புதிய தோற்றம் தவிர ஸ்மார்ட்போனின் அம்சங்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.



சமீபத்தில் ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டது. இதன் பேஸ் மாடல் 4 ஜி.பி. வேரியண்ட் ரூ. 15,990 விலையிலும், 8 ஜி.பி. ரேம் மாடல் ரூ. 19,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை ஒப்போ ஏ9 2020 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் நானோ வாட்டர் டிராப் ஸ்கிரீன், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 2 எம்.பி. டெப்த் சென்சார், 2 எம்.பி. மேக்ரோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News