உள்ளூர் செய்திகள்
முட்டை

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை ரூ.4.90 ஆக உயர்வு

Published On 2021-12-09 03:58 GMT   |   Update On 2021-12-09 03:58 GMT
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கேக் தயாரிக்க முட்டை அதிக அளவில் தேவைப்படுதால் விலை ஏற்றத்துக்கு இதுவும் ஒரு காரணமாகும்.
நாமக்கல்:

நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில நாட்களாக முட்டை நுகர்வு அதிகரிப்பால் முட்டை விலை உயர்ந்து வருகிறது. ரூ4.85 ஆக இருந்த முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.4. 90 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறுகையில், குளிர்காலம் என்பதால் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளது. இதனால் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தில் அதிக அளவில் முட்டை தேவை ஏற்பட்டுள்ளது.

முக்கியமாக கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கேக் தயாரிக்க முட்டை அதிக அளவில் தேவைப்படுதால் விலை ஏற்றத்துக்கு ஒரு காரணமாகும். மேலும் வட மாநிலங்களுக்கும் தொடர்ந்து முட்டை அனுப்பி வைக்கிறோம் என்றார்.
Tags:    

Similar News