செய்திகள்
முக ஸ்டாலின்

ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா, நன்றி கொன்ற இருவர் நடத்தும் நாடகம்- முக ஸ்டாலின்

Published On 2021-01-26 13:40 GMT   |   Update On 2021-01-26 13:40 GMT
ஜெயலலிதா நினைவிடத்தை திறப்பது தேர்தலுக்காக அரங்கேற்றப்படும் அரசியல் நாடகம் என்று முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த மர்மத்தை வெளியிட இயலாத அ.தி.மு.க ஆட்சியாளர்கள், அவரது நினைவிடத்தை திறந்துவைக்க இருக்கிறார்கள். 

இந்தநிலையில்  திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, 

ஜெயலலிதா நினைவிடத்தை திறப்பது தேர்தலுக்காக அரங்கேற்றப்படும் அரசியல் நாடகம். 4 ஆண்டுகள் முடிந்தும் ஜெயலலிதாவின் மரணத்தில் புதைந்திருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கவில்லை. 

ஜெயலலிதாவின் உயிருக்கு உரிய நீதி வழங்க முன்வராத எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் நினைவிடத்தை திறக்க உரிமை உள்ளதா? 

ஜெயலலிதா மரணத்தின் உண்மை வெளிச்சத்திற்கு வருவதை தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்கிறது அரசு. துணை முதல்வரான பிறகும் ஜெயலலிதா மரணத்துக்கான உண்மையை அறிய முற்பட்டாரா ஓபிஎஸ் என ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

திமுக ஆட்சி அமைந்ததும் ஜெயலலிதா மரணம், கொடநாடு சம்பவத்தில் தண்டனை பெற்றுத் தரப்படும் என்றார்.
Tags:    

Similar News