ஆன்மிகம்
சதுரகிரி

அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்கு செல்ல நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி

Published On 2020-12-11 09:07 GMT   |   Update On 2020-12-11 09:07 GMT
அமாவாசையை முன்னிட்டு வருகிற 14ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் நாளை சனிக்கிழமை (15ந் தேதி) வரை சதுரகிரி மலைக் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட எல்லையையொட்டி உள்ள சதுரகிரி மலை உச்சியில் பிரசித்தி பெற்ற சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது.

இங்கு ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோச நாட்களில் ஆயிரக் கணக் கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள் வனத்துறை கண் காணிப் பில் உள்ள சதுரகிரி மலை ஏற பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

அமாவாசை, பவுர்ணமி, பிரதோ‌ஷத்தை முன்னிட்டு சதுரகிரி மலை ஏற பக்தர்களுக்கு 4 நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப் படுகிறது.

அந்த சமயத்தில் மலை யில் மழை பெய்தால் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அமாவாசையை முன்னிட்டு வருகிற 14ஆம் தேதி (திங்கட்கிழமை) முதல் நாளை சனிக்கிழமை (15ந் தேதி) வரை சதுரகிரி மலைக் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை காலை 7 மணிமுதல் பக்தர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு பின் அனு மதிக்கப்படுகிறார்கள். பக்தர்கள் உடமைகள் சோதிக்கப்படும்.

தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அமாவாசையை முன்னிட்டு சுந்தர மகா லிங்கம் கோவிலில் தரிசனம், அன்னதானம் போன்ற ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
Tags:    

Similar News