செய்திகள்
வைகோ

7 பேர் விடுதலைக்கு மத்திய அரசு தடையாக இருக்கிறது- வைகோ குற்றச்சாட்டு

Published On 2021-08-18 09:14 GMT   |   Update On 2021-08-18 09:14 GMT
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய சமூக நீதி என்று வைகோ கூறினார்.
அவனியாபுரம்:

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்தவர்கள் மாநில அரசே விடுதலை செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதற்கு முன்பாகவே இவர்களது தூக்குத்தண்டனையை நீதிமன்றம் ரத்து செய்து சதாசிவம் நீதிபதியாக இருந்தபோது இவர்களை விடுதலை செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கி உள்ளார்.

உடனே மாநில அரசு 3-வது நாளில் தீர்மானம் நிறைவேற்றி அதை கவர்னரிடம் அனுப்பி வைத்தது. கவர்னர் அதை குப்பையில் போட்டுவிட்டார்.

தற்போது தமிழக அரசு 7 பேரை விடுதலை செய்வதற்கு மத்திய அரசு தடையாக இருக்கிறது.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய சமூக நீதி ஆகும்.

கொடநாடு கொலை என்பது படுபயங்கர பாதகமான கொலையாகும். அங்கே பணம் மற்றும் நகைகள், ஆவணங்களுக்காக செய்யப்பட்ட கொலையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News