செய்திகள்
அமித்ஷா

பாஜக தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று குடியுரிமைச் சட்டத்தைப் பற்றி புரியவைக்க வேண்டும்- அமித்ஷா

Published On 2020-01-11 09:43 GMT   |   Update On 2020-01-11 09:43 GMT
குடியுரிமைச் சட்டத்தைப் பற்றி எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றன என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
காந்திநகர்:

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டம் பற்றியும் அதற்கு எதிராக நாடு முழுவதும் கிளம்பியுள்ள எதிர்ப்பலைகள் பற்றியும் அனைவரும் அறிந்ததே. நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்பப் பெறுவதாக இல்லை என கூறப்படுகிறது.

இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு இடங்களில் போராட்டகளத்தில் வன்முறையும் வெடித்தது. மத்திய அரசின் இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. 

இந்நிலையில், குடியுரிமைச் சட்டத்தைப் பற்றி எதிர்க்கட்சிகள் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றன என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.

குஜராத் காவல்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமித்ஷா, ‘குடியுரிமைச் சட்டம் குடியுரிமையை பறிப்பதற்கு அல்ல, குடியுரிமை கொடுப்பதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு வேறு எந்த பிரச்சினையும் கிடைக்கவில்லை. எனவே இந்த சட்டத்தைப்பற்றி பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். குடியுரிமைச் சட்டத்தைப் பற்றிய உண்மைத்தன்மையை பற்றி பாஜக தலைவர்களும், தொண்டர்களும் மக்களுக்கு வீடு வீடாகச் சென்று புரிய வைக்க வேண்டும்’, என கூறினார்.

Tags:    

Similar News