செய்திகள்
கொரோனா வைரஸ்

பிளஸ் 2 மாணவிக்கு கொரோனா தொற்று- சுகாதார அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு

Published On 2021-09-14 03:21 GMT   |   Update On 2021-09-14 03:21 GMT
கமுதியில் பிளஸ்-2 மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் படித்த பள்ளியில் சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கமுதி:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோட்டைமேடு பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி கமுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் படித்து வருகிறார். அந்த மாணவி பள்ளிக்கு சென்று வந்தநிலையில் கடந்த 10-ந்தேதி கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து மாணவி அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து அந்த பள்ளிக்கு வட்டார ஆரம்ப சுகாதார தலைமை நிலைய மருத்துவ அதிகாரி அசோக், வட்டார சுகாதார மேற்பார் வையாளர் பொன்னு பாக்கியம், டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் சென்று மாணவி படித்த வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகள் ஆகியோருக்கு தொற்று பரிசோதனை செய்தனர்.

மேலும் மாணவி படித்த பள்ளி வகுப்பு அறை முழுவதும் கிருமி நாசினிகள் தெளித்து சுத்தப்படுத்தப்பட்டு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவுக்கு பின்பே வேறு யாருக்கும் கொரோனா தொற்று உள்ளதா என தெரியவரும்.
Tags:    

Similar News