செய்திகள்
கோப்புப்படம்

ஆப்கானிஸ்தானில் முக்கிய அணையை தலீபான்கள் பிடித்தனர்

Published On 2021-05-09 01:03 GMT   |   Update On 2021-05-09 01:03 GMT
அர்கந்தாப் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணையை தாங்கள் கைப்பற்றி விட்டதாக தலீபான் பயங்கரவாத அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
காபூல்:

ஆப்கானிஸ்தானில் காந்தஹார் மாகாணத்தில் தஹ்லா என்ற அணை உள்ளது. இதை 70 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா கட்டிக்கொடுத்தது. ஆப்கானிஸ்தானின் இரண்டாவது மிகப்பெரிய அணை இது.

அர்கந்தாப் மாவட்டத்தில் உள்ள இந்த முக்கிய அணையை தாங்கள் கைப்பற்றி விட்டதாக தலீபான் பயங்கரவாத அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

இதை தலீபான் அமைப்பின் செய்தி தொடர்பாளர் காரி யூசுப் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசுகையில் உறுதி செய்தார்.

இந்த அணைதான் விவசாயிகளுக்கு கால்வாய் பாசனத்துக்கும், காந்தஹார் நகரத்தின் குடிநீர் தேவைக்கும் தண்ணீர் வழங்கும் அணை ஆகும்.

பல மாத சண்டைகளுக்கு பின்னர் இந்த அணையை இப்போது தலீபான்கள் வசப்படுத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News