செய்திகள்
தலைமை தபால் நிலையம் முன்பு தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தபோது எடுத்தபடம்.

மத்திய அரசின் தொழிலாளர் விரோதபோக்கை கண்டித்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-11-28 13:10 GMT   |   Update On 2020-11-28 13:10 GMT
மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்து திருவாரூரில் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவாரூர்:

மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கினை கண்டித்து திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் வங்கி ஊழியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் அழகிரி தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் பாலதண்டாயுதம், ஏ.ஐ.டி.யூ.சி மாவட்ட செயலாளர் குணசேகரன், வங்கி ஊழியர் சங்க தலைவர் காளிமுத்து, அஞ்சல் துறை ஊழியர் சங்க தலைவர் தர்மதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொழிலாளர் நலசட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும். விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்ப பெறவேண்டும்.கொரோனா கால ஊரடங்கில் பாதித்த தொழிலாளர்களுக்கு ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும்.

பொதுத்துறைகளை தனியார் மயமாக்க கூடாது. வங்கிகள் இணைப்பு கைவிட வேண்டும். வங்கி வைப்புநிதி வட்டி அதிகரித்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Tags:    

Similar News