செய்திகள்
கலெக்டர் வினீத் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்திய காட்சி.

சுதந்திர தினவிழா-திருப்பூரில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்

Published On 2021-08-15 09:00 GMT   |   Update On 2021-08-15 09:00 GMT
சிறப்பாக பணியாற்றிய மாநகர போலீசார் 35 பேர், மாவட்ட போலீசார் 34 பேருக்கு பதக்கங்கள் மற்றும் நற்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
திருப்பூர்:

நாடு முழுவதும் இன்று 75-வது சுதந்திரதினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற  நிகழ்ச்சியில்  கலெக்டர் வினீத் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.

பின்னர் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு மாற்றுத்திறனாளிகள் துறை, வருவாய்த்துறை, வேளாண் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள்  சார்பில் பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 45 லட்சத்து 74 ஆயிரத்து 605 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர்  சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளை புறாக்கள் மற்றும் மூவர்ண பலூன்களை பறக்கவிட்டார்.இதைத்தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய மாநகர போலீசார் 35 பேர், மாவட்ட போலீசார் 34பேருக்கு பதக்கங்கள் மற்றும் நற்சான்றிதழ்களை வழங்கினார்.

அரசு துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை  வழங்கினார்.அதன்பின்னர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட முன்கள பணியாளர்கள், தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.  பொதுமக்கள் மைதானத்துக்கு வரவும் தடைவிதிக்கப்பட்டு இருந்தது. கல்லூரி வளாகம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டனர்.


மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி   தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

கொரோனா தொற்று காரணமாக சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகளின் வீட்டுக்கு  அதிகாரிகள்  சென்று  பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர். திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

அதன்பிறகு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட முன்களப்பணியாளர்களை பாராட்டி கவுரவித்தார். இதைத்தொடர்ந்து திருப்பூர் குமரன் நினைவுத்தூண் மற்றும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சுதந்திர தினத்தையொட்டி திருப்பூர் மாவட்டம்  முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டனர்.
Tags:    

Similar News