ஆட்டோமொபைல்
மஹிந்திரா XUV700

மஹிந்திரா XUV700 இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2021-05-05 08:24 GMT   |   Update On 2021-05-05 08:24 GMT
மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய XUV700 மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது.


மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் XUV700 மாடலை 2022 இரண்டாவது காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய தகவல்களில் இந்த மாடல் 2021 அக்டோபர் மாதத்தில் அறிமுகமாகும் என கூறப்பட்டது.

இந்தியாவில் அறிமுகமானதும், இந்த மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் XUV500 மாடலுக்கு மாற்றாக இருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் XUV700 பல்வேறு புது அம்சங்கள், அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



புதிய மஹிந்திரா XUV700 நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கும் என்றும் XUV500 மாடலை விட அளவில் பெரியதாக இருக்கும் என கூறப்படுகிறது. புதிய XUV700 மஹிந்திரா நிறுவனத்தின் சக்கன் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது உலகத்தரம் வாய்ந்த அம்சங்கள் நிறைந்த மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்த கார் லெவல் 1 ஆட்டோனோமஸ் தொழில்நுட்பம், ஆட்டோமேடிக் பார்க்கிங், லேன் சேன்ஜ் அசிஸ்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். புதிய XUV700 6 மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இரு வேரியண்ட்களும் சவுகரியமான இடவசதியை வழங்கும்.

Tags:    

Similar News