தொழில்நுட்பச் செய்திகள்
மோட்டோ ஜி52

அசத்தல் அம்சங்களுடன் அறிமுகான மோட்டோ ஜி52

Published On 2022-04-13 11:31 GMT   |   Update On 2022-04-13 11:31 GMT
இதில் நீரில் இருந்து பாதுகாப்பு தரும் அம்சம், டால்பி அட்மாஸ் சப்போர்ட் செய்யும் இரண்டு ஸ்பீக்கர்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி52 ஐரோப்பிய மார்க்கெட்டில் வெளியாகியுள்ளது.

இந்த போனில் 6.6 இன்ச் OLED டிஸ்பிளே, 1080X2400 பிக்ஸல், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 20:9 ஆஸ்பெக்ட் ரேட்ஷியோவுடன் வருகிறது. 

இந்த போன் Qualcomm Snapdragon 680 சிப்செட்டில் இயங்கும் என கூறப்படுகிறது. இதில் தரப்பட்டுள்ள MyUX மூலம் நமது பிடித்த லுக்கில் செட்டிங்ஸை வைத்துகொள்ளலாம்.

இந்த கேமராவில் 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார், 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் லென்ஸ், 2 மெகாபிக்ஸல் டெப்த் சென்சார் இடம்பெறும் என கூறப்படுகிறது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா இடம்பெறுகிறது.

மேலும் இதில் 5000mAh பேட்டரி, 30W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் வருகிறது. இதில் நீரில் இருந்து பாதுகாப்பு தரும் அம்சம், டால்பி அட்மாஸ் சப்போர்ட் செய்யும் இரண்டு ஸ்பீக்கர்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இந்த போன் 4ஜிபி+128 ஜிபி வேரியண்ட் மற்றும் 6ஜிபி+128 ஜிபி வேரியண்டில் வெளியாகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.20,600-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த போனின் இந்திய வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
Tags:    

Similar News