ஆன்மிகம்
சாமுண்டிமலை அடிவாரத்தில் உள்ள மகா நந்திக்கு அபிஷேகம் நடந்த போது எடுத்த படம்.

மைசூரு: ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட நந்திக்கு மகா அபிஷேகம்

Published On 2019-11-05 03:25 GMT   |   Update On 2019-11-05 03:25 GMT
மைசூரு சாமுண்டிமலையில் உள்ள ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்ட நந்திக்கு மகா அபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
மைசூரு அருகே சாமுண்டிமலையில் பிரசித்தி பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த சாமுண்டி மலை அடிவாரத்தில் பிரமாண்ட நந்தி சிலை உள்ளது. சுமார் 13 அடி உயரம் கொண்டது இந்த நந்தி சிலை. இது ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டது. இந்த மகா நந்திக்கு கன்னட கார்த்திகை மாதத்தையொட்டி மகா அபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.

அதுபோல் கன்னட கார்த்திகை மாதத்தின் முதல் திங்கட்கிழமையான நேற்று மகா நந்திக்கு மகா அபிஷேகம் நடந்தது. பால், தயிர், குங்குமம், மஞ்சள், இளநீர், விபூதி நெய், சந்தனம், பூக்கள் உள்பட திவ்விய, திரவிய பொருட்களால் மகா நந்திக்கு மகா அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மகாநந்தியை வழிபட்டு சென்றனர். இதில், சுத்தூர் மடாதிபதி சிவராத்திரி தேசி கேந்திரசுவாமி, ஓசை மடாதிபதி உள்பட பல்வேறு மடாதிபதிகள் கலந்துகொண்டனர்.

மாலையில் நந்தி சிலை சுற்றிலும் தீபங்கள் ஏற்றி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News