தொழில்நுட்பம்
ஐபேட் ப்ரோ

10.8 இன்ச் ஆப்பிள் ஐபேட் வெளியீட்டு விவரம்

Published On 2020-06-29 10:35 GMT   |   Update On 2020-06-29 10:35 GMT
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபேட் மற்றும் ஐபேட் மினி வெளியீட்டு விவரங்கள் வெளியாகி உள்ளது.


பிரபல ஆராய்ச்சியாளரான மிங் சி கியூ ஆப்பிள் நிறுவனம் 10.8 இன்ச் ஐபேட் மாடலினை இந்த ஆண்டும், 8.5 இன்ச் ஐபேட் மினி மாடலை அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

புதிய ஐபேட் மினி ஆப்பிள் ஏ13 பயோனிக் பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் 10.8 இன்ச் ஐபேட் மாடலில் ஏ10 ஃபியுஷன் சிப் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஐபேட் சீரிசில் ஆப்பிள் நிறுவனம் - 12.9 இன்ச் மற்றும் 11 இன்ச் ஐபேட் ப்ரோ, 10.5 இன்ச் ஐபேட் ஏர், 10.2 இன்ச் ஐபேட் மற்றும் 7.9 இன்ச் ஐபேட் மினி என நான்கு மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு 10.8 இன்ச் ஐபேட் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. எனினும், இது 10.2 இன்ச் ஐபேட் மாடல் மேம்பட்ட ஸ்கிரீன் பெறுமா அல்லது 10.5 இன்ச் ஐபேட் ஏர் மேம்படுத்தப்படுகிறதா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. 

முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஐபேட் மினி மேம்படுத்தப்பட்டு ஏ12 பயோனிக் சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய தகவல்களின் படி 2021 ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் மினி மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய ஐபேட் மாடல்கள் 10 வாட் சார்ஜருடன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான தகவல்களில் ஐபோன் 12 சீரிஸ் மாடல்களுடன் இயர்பாட்ஸ் மற்றும் பவர் அடாப்டர் உள்ளிட்டவை வழங்கப்படாது என கூறப்படுகிறது.
Tags:    

Similar News