செய்திகள்
ஏக்நாத் கட்சே

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஏக்நாத் கட்சேக்கு கொரோனா

Published On 2020-11-20 02:17 GMT   |   Update On 2020-11-20 02:17 GMT
தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் ஏக்நாத் கட்சேவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதனையடுத்து மும்பையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
மும்பை :

தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே (வயது 68). இவருக்கு நேற்று பிற்பகல் கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது.

இதையடுத்து அவர் டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. மும்பையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஏக்நாத் கட்சேயின் மகள் ராகினிக்கு கடந்த 15-ந் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அவரது தந்தையான ஏக்நாத் கட்சேவும் தொற்று நோய்க்கு ஆளாகி உள்ளார்.

பா.ஜனதாவில் மூத்த தலைவராக விளங்கிய ஏக்நாத் கட்சே கடந்த மாதம் அந்த கட்சியில் இருந்து விலகி தேசியவாத காங்கிரசில் இணைந்தவர் ஆவார்.

மராட்டியத்தில் ஏற்கனவே துணை முதல்-மந்திரி அஜித்பவார், எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் ஏறக்குறைய 15 மந்திரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News