செய்திகள்
திருப்பூர் லட்சுமிநகர் பகுதியில் உள்ள கடை முன்பு பாலித்தீன் திரை அமைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

பாலித்தீன் மூலம் பாதுகாப்பு ஏற்பாடு

Published On 2021-06-10 10:33 GMT   |   Update On 2021-06-11 02:46 GMT
ஊரடங்கு தளர்வு காரணமாக மளிகை, காய்கறி கடைகள் திறக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கொரோனா பாதித்து வியாபாரிகள் பலர் பலியாகியுள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு அதிகரித்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். தற்போது தடுப்பு பணிகள் காரணமாக கட்டுக்குள் வருகிறது. இதனிடையே ஊரடங்கு தளர்வு காரணமாக மளிகை, காய்கறி கடைகள் திறக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கொரோனா பாதித்து வியாபாரிகள் பலர் பலியாகியுள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் வியாபாரிகள் கொரோனா பிடியில் சிக்காமல் இருக்கும் வகையில் பாதுகாப்புடன் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி கடையின் முன்பகுதியில் பாலித்தீனை முழுவதுமாக அடைத்தப்படி  அமைத்துள்ளனர். பொதுமக்கள் வந்து பொருட்கள் கேட்கும்போது சற்று விலக்கி விட்டு வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் கொரோனா தொற்று பரவலை தடுக்க முடியும். மேலும் தூசியும் படியாமல் இருக்கும் என கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே ஆட்டோ டிரைவர்கள் பலரும் இதுபோன்று ஆட்டோக்களில் செய்துள்ளனர்.  டிரைவருக்கு பின்புறம் பாலித்தீன் மூலம் முழுவதுமாக மூடியுள்ளனர். பின்புற இருக்கைகளில் பயணிகள் இருக்கிறார்கள். இதன் மூலம் டிரைவர்கள் பாதுகாப்பாகவும், பயணிகள் பாதுகாப்பாகவும் இருக்கும் நிலையை பல ஆட்டோ டிரைவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து டிரைவர்கள் கூறுகையில், கொரோனா தொற்று பாதித்த பலர் ஆட்டோக்களில் பயணிக்கிறார்கள். இதன்மூலம் தொற்றுபரவ வாய்ப்புள்ளது. எனவே பாதுகாப்பு கருதி இந்த ஏற்பாடுகளை செய்துள்ளோம் என்றனர்.
Tags:    

Similar News