ஆன்மிகம்
கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி

5 மாதங்களுக்கு பிறகு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி

Published On 2020-09-03 04:27 GMT   |   Update On 2020-09-03 04:27 GMT
தஞ்சை மாவட்டத்தில் 5 மாதங்களுக்கு பிறகு கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. திருப்பலியில் கிறிஸ்தவர்கள் பலர், முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கலந்து கொண்டனர்.
கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகத்தில் வழிபாட்டு தலங்களை மூட மார்ச் மாதத்தில் மத்திய, மாநில அரசுகள் உத்தரவு பிறப்பித்தன. தற்போது பல்வேறு நிபந்தனைகளுடன் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழகஅரசு நேற்றுமுன்தினம் அனுமதி அளித்தது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள கோவில்கள் எல்லாம் திறக்கப்பட்டன.

அதேபோல் தஞ்சை மாவட்டத்தில் கிறிஸ்தவ ஆலயங்கள் திறக்கப்பட்டு நேற்றுமுதல் வழிபாடு நடைபெற்றது. தஞ்சை மேரீஸ்கார்னர் அருகே உள்ள திரு இருதய பேராலயத்தில் நேற்று காலை திருப்பலி நடந்தது. மாலையில் கூட்டுத்திருப்பலி உதவி பங்குத்தந்தை மார்டின் தலைமையில் நடந்தது.

திருப்பலியில் கிறிஸ்தவர்கள் பலர், முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் கலந்து கொண்டனர். கொரோனா தொற்றில் இருந்து அனைவரும் விடுபட்டு நாடு இயல்பு நிலைக்கு திரும்பவும், கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், அரசு அலுவலர்கள், போலீஸ்துறை ஆகியோருக்காகவும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆலயத்தின் நுழைவுவாயிலில் கைகளை கழுவுவதற்கு வசதி செய்யப்பட்டிருந்தது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் எல்லாம் திறக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்களும் திறக்கப்பட்டு, தொழுகை நடத்த இஸ்லாமியர்கள் அனுமதிக்கப்பட்டனர். வழக்கம்போல் பள்ளிவாசல்களில் 5 முறை தொழுகை அரசின் வழிகாட்டுலின்படி நடந்தது. இதில் இஸ்லாமியர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து முக கவசம் அணிந்து தொழுகை நடத்தினர்.
Tags:    

Similar News