ஆட்டோமொபைல்
2020 ஹோண்டா குரோம்

சர்வதேச சந்தையில் அறிமுகமான 2020 ஹோண்டா குரோம்

Published On 2020-05-02 09:12 GMT   |   Update On 2020-05-02 09:12 GMT
ஹோண்டா மோட்டார் கோ நிறுவனம் 2020 ஹோண்டா குரோம் மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.



2020 ஹோண்டா குரோம் மோட்டார்சைக்கிள் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. சில சந்தைகளில் இதே மோட்டார்சைக்கிள் எம்எஸ்எக்ஸ் 125 எனும் பெயரில் அழைக்கப்படுகிறது.

முந்தைய மோட்டார்சைக்கிளுடன் ஒப்பிடும் போது புதிய 2020 குரோம் மாடல் பல்வேறு புதிய நிறங்களில் கிடைக்கிறது. எனினும், இரு மாடல்களின் என்ஜினில் எவ்வித மாற்றமும் மேற்கொளஅளப்படவில்லை. புதிய 2020 ஹோண்டா குரோம் மோட்டார்சைக்கிள் இன்கிரெடிபில் கிரீன், ஹாலோவீன் ஆரஞ்சு, புளூ ரேஸ்ப்பெரி மற்றும் செர்ரி ரெட் நிறங்களில் கிடைக்கிறது.



புதிய நிறம் தவிர மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. 2020 ஹோண்டா குரோம் மாடலில் 125 சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 9.65 பிஹெச்பி பவர், 10.8 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. 

குரோம் மோட்டார்சைக்கிளின் முன்புறம் 31 எம்எம் அப்சைடுடவுன் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்படுகிறது. புதிய மோட்டார்சைக்கிள் அழகிய தோற்றம் கொண்டிருக்கிறது. மேலும் இது அன்றாட பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.   

இத்துடன் 2020 குரோம் மாடலில் எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லேம்ப், ஆப்ஷனல் ஏபிஎஸ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், முன்புறம் 220 எம்எம் டிஸ்க், பின்புறம் 190 எம்எம் டிஸ்க் பிரேக் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News