செய்திகள்
சர்பராஸ் அகமது, இம்ரான் கான்

உள்நாட்டு போட்டிகளில் ஜொலித்தால் சர்பராஸ் அகமதுக்கு பாகிஸ்தான் அணியில் இடம்: இம்ரான் கான்

Published On 2019-11-18 10:10 GMT   |   Update On 2019-11-18 10:10 GMT
கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட சர்பராஸ் அகமது உள்நாட்டு தொடரில் சிறப்பாக விளையாடினால் பாகிஸ்தான் அணிக்கு திரும்பலாம் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் சர்பராஸ் அகமது. டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் கேப்டனில் பதவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில், அணியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிடவில்லை. உள்நாட்டு போட்டியில் சிறப்பாக விளையாடினால் அணியில் மீண்டும் அவருக்கு இடம் உண்டு என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் புரவலராக இருக்கும் இம்ரான் கான் இதுகுறித்து கூறுகையில் ‘‘டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதை வைத்து வீரரின் ஆட்டம் மற்றும் ஃபார்ம்-ஐ நிர்ணயிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் சரியானது. உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் சர்பராஸ் அகமதுவால் மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு திரும்ப முடியும்’’ என்றார்.
Tags:    

Similar News