செய்திகள்
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா

சூரப்பா மீதான புகார்கள்- விசாரணைக் குழுவை அமைத்தது தமிழக அரசு

Published On 2020-11-13 07:56 GMT   |   Update On 2020-11-13 07:56 GMT
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான புகார்கள் பற்றி விசாரணை நடத்த தமிழக அரசு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
சென்னை:

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்புத் தகுதி, அரியர் தேர்வு ரத்து விவகாரங்களில் அரசின் நிலைப்பாட்டிற்கு சூரப்பா அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் அவர் புகார்கள் எழுப்பப்பட்டன. 

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான புகார்கள் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்கவும் விசாரணை குழுவுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. 

குழு தரும் விசாரணை அறிக்கையின் அடிப்படையில் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அரியர் தேர்வு விவகாரம், சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட விவகாரங்களில் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக சூரப்பா மீது புகார் எழுப்பப்பட்டதாக  உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News