செய்திகள்
பேரணியாக சென்ற காங்கிரசார்.

வேளாண் சட்டம் ரத்து- பேரணியாக சென்று கொண்டாடிய காங்கிரசார்

Published On 2021-11-20 09:47 GMT   |   Update On 2021-11-20 09:47 GMT
விஜய் வசந்த் எம்.பி. தலைமையில் குஞ்சன் நாடார் சிலை வரை பேரணியாக சென்று விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை ரத்து செய்ததை கொண்டாடினர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண்மை திருத்தச் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் ஒரு வருடத்திற்கு மேலாக போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியும் போராட்டத்தில் களமிறங்கியது.

இந்நிலையில் பிரதமர் மோடி மூன்று வேளாண்மை சட்டங்களை ரத்துச் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். இதனை கொண்டாடும் வகையில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவில் உள்ள குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அலுவலகத்தில் இருந்து விஜய் வசந்த் எம்.பி. தலைமையில் குஞ்சன் நாடார் சிலை வரை பேரணியாக சென்று கொண்டாடினர். விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை மோடி ரத்து செய்ததை காங்கிரஸ் கட்சி போராட்டம் வெற்றிபெற்றது என கோஷங்கள் எழுப்பினர்.

இதில் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ்கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், வர்த்தக காங்கிரஸ் தலைவர் முருகேசன், ஸ்ரீநிவாசன், நவீன், அருள் சபிதா, மகேஸ் லாசர், கால பெருமாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டம் விளாத்துறை ஊராட்சி ஒன்றியம் மாராயபுரம் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தனது சொந்த செலவில் கணினி வழங்கினார்.
Tags:    

Similar News