செய்திகள்
அமெரிக்க அதிபர் டிரம்ப்

பிரச்சினைக்கு தீர்வுகாண ஈரானுக்கு காலக்கெடு இல்லை- டிரம்ப் பேட்டி

Published On 2019-06-28 22:24 GMT   |   Update On 2019-06-28 22:24 GMT
பிரச்சினைக்கு தீர்வு காண ஈரானுக்கு காலக்கெடு எதுவும் இல்லை. நிறைய அவகாசம் இருக்கிறது. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க தேவையில்லை என்று டிரம்ப் கூறியுள்ளார்.
டோக்கியோ:

வல்லரசு நாடுகளுடன் ஈரான் ஏற்படுத்திய அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் இருநாடுகளுக்கும் இடையில் மோதல் உருவானது. இந்த மோதல் நாளுக்கு நாள் முற்றி விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இரு நாடுகளும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஜப்பானில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், மாநாட்டுக்கு மத்தியில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவரிடம் ஈரான் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு டிரம்ப், “பிரச்சினைக்கு தீர்வு காண ஈரானுக்கு காலக்கெடு எதுவும் இல்லை. நிறைய அவகாசம் இருக்கிறது. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க தேவையில்லை. ஈரான் விவகாரத்தில் கடந்த 3 நாட்களாக கூறி வருவது தான் எனது நிலைப்பாடு. அதில் எந்த மாற்றமும் இல்லை. அனைத்தும் சுமுகமாக முடியும் என்று நம்புகிறேன்” என கூறினார்.

முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்பு, “ஈரானுடன் போரில் ஈடுபட விரும்பவில்லை. ஒருவேளை போர் ஏற்பட்டால் அது நீண்ட காலம் நீடிக்காது. அமெரிக்கா எளிதில் வென்றுவிடும்” என டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News