செய்திகள்
துரைமுருகன்

அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது- துரைமுருகன்

Published On 2021-02-19 12:32 GMT   |   Update On 2021-02-19 12:32 GMT
தமிழக அமைச்சர்கள் மீதான 2-வது ஊழல் பட்டியலை கவர்னரை சந்தித்து தி.மு.க.வினர் அளித்தனர்.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மீது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே ஊழல் பட்டியலை தயாரித்து கவர்னரிடம் வழங்கி இருந்தார்.

இந்தநிலையில் தமிழக அமைச்சர்கள் மீது 2-வது ஊழல் பட்டியலை தி.மு.க. தயாரித்துள்ளது. இந்த பட்டியலை தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. உள்ளிட்டோர் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து அளித்தனர். 

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன் கூறியதாவது:- 

• அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு தனக்குள்ள அதிகாரத்தின் படி நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் கூறினார்.  5 அமைச்சர்கள், 1 எம்எல்ஏ மீது 9 புகார்கள் ஆதாரத்துடன் அளிக்கப்பட்டுள்ளது. 

• திமுக சார்பில் ஏற்கனவே தந்த புகாரை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியிருப்பதாக கவர்னர் தெரிவித்தார்.

• அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க, ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News