செய்திகள்
கோப்புபடம்.

உடுமலையில் உயரமாக கட்டப்பட்ட மழைநீர் வடிகால் சீரமைப்பு

Published On 2021-10-23 06:59 GMT   |   Update On 2021-10-23 06:59 GMT
உயரமாக கட்டப்பட்ட மழைநீர் வடிகாலை மட்டப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
உடுமலை:

உடுமலை கச்சேரி வீதியில் உள்ள தாலுகா அலுவலகம் நுழைவாயில் பகுதியில் அமைக்கணீப்பட்ட மழைநீர் கால்வாய் சாலை மட்டத்தை விட மிகவும் உயரமாக இருந்தது. இதனால் வாகனங்கள் தாலுகா அலுவலகத்தில் செல்ல முடியாமல் சாலை ஓரத்திலேயே நிறுத்தும் நிலை ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.

பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருந்ததால் பொதுமக்கள், வயதானவர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை இருந்தது. இதுகுறித்து பல்வேறு அமைப்பினர் உயரமாக கட்டப்பட்ட மழைநீர் வடிகாலை மட்டப்படுத்த வேண்டும் என தெரிவித்தனர். 

இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு மேடான மழைநீர் கால்வாய் தளத்தை தரையுடன் இணைக்கும் வகையில் சாய்வு தளம் அமைக்கப்பட்டது. தற்போது வாகனங்கள் பொதுமக்கள் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News