ஆட்டோமொபைல்
மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ

சோதனையில் சிக்கிய மாருதி சுசுகி சிறிய எஸ்.யு.வி.

Published On 2019-08-22 10:55 GMT   |   Update On 2019-08-22 10:55 GMT
மாருதி சுசுகி நிறுவனத்தின் சிறிய எஸ்.யு.வி. மாடல் கார் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.



மாருதி சுசுகி நிறுவனத்தின் எஸ் பிரெஸ்ஸோ சிறிய ரக எஸ்.யு.வி. மாடல் எக்ஸ்.எல் மாடலுக்கு அடுத்தப்படியாக அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய எஸ்.யு.வி. பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது.

புதிய காரில் பெரிய பொனெட் லைன் மற்றும் பாக்ஸி புரோபோஷன்களை கொண்டிருக்கிறது. இது பார்க்க விடாரா பிரெஸ்ஸா மாடலை போன்று காட்சியளிக்கிறது. இதன் பொனெட் லைன் மற்றும் பெரிய கிரில் உள்ளிட்டவை பார்க்க வழக்கமான எஸ்.யு.வி. தோற்றத்தை வழங்குகிறது.

இத்துடன்  பெரிய ஆங்குலர் ஹாலோஜென் ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் சக்கரங்கள் 13-இன்ச் இருக்கும் என தெரிகிறது. புதிய எஸ்,யு.வி. இந்திய ஆலையிலேயே உருவாக்கப்பட்ட இரண்டாவது மாடல் ஆகும். முன்னதாக மாருதி சுசுகியின் விடாரா பிரெஸ்ஸா மாடல் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது.



புதிய எஸ் பிரெஸ்ஸோ மாடலில் 1.0 லிட்டர் 3-சிலிண்டர் மோட்டார் வழங்கப்படுகிறது. பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் இந்த என்ஜின் 68 பி.எஸ். பவர், 90 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதே மாடலின் ஏ.எம்.டி. வெர்ஷனும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இத்துடன் எஸ் பிரெஸ்ஸோ மாடலில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்மார்ட்பிளே ஸ்டூடியோ யூனிட் வழங்கப்படலாம். இதே அம்சம் புதிய வேகன் ஆர் மாடலிலும் வழங்கப்பட்டிருந்தது. புதிய கார் டூயல்-டோன் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதன் விலை ரூ. 4.5 முதல் ரூ. 5 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

புகைப்படம் நன்றி: Cartoq
Tags:    

Similar News