செய்திகள்
கோப்புப்படம்

டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கான பரிசுத் தொகையை அறிவித்தது ஐ.சி.சி.

Published On 2021-10-10 12:40 GMT   |   Update On 2021-10-10 12:40 GMT
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பையில் வெற்றிபெறும் அணிக்கு ரூ. 12.02 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. வருகிற 17-ந்தேதி போட்டி தொடங்குகிறது. நவம்பர் 14-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 12 அணிகள் பங்கேற்கின்றன. நான்கு அணிகள் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்று முதன்மை சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ. 12.02 கோடி (1.6 மில்லியன் அமெரிக்க டாலர்) பரிசாக வழங்கப்படும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

மேலும், இறுதிப் போட்டியில் தோல்வியடையும் அணிக்கு 6.01 கோடி ரூபாயும், அரையிறுதி போட்டிகளில் தோல்வியடையும் அணிகளுக்கு தலா 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் (சுமார் 3 கோடி ரூபாய்), 2-வது சுற்றில் வெற்றிபெறும் அணிகளுக்கு தலா 40 ஆயிரம் அமெரிக்க டாலர்கள், தோல்வியடையும் அணிகளுக்கு தலா 70 ஆயிரம் அமெரிக்க டாலர்கள், முதல் சுற்றில் வெற்றிபெறும் அணிகளுக்கு தலா 40 ஆயிரம் அமெரிக்க டாலர்களும் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.

மொத்த பரிசுத்தொகை 5.6 மில்லியன் அமெரிக்க டாலராகும். இந்திய பண மதிப்பில் சுமார் 37.5 கோடி ரூபாய் ஆகும்.
Tags:    

Similar News