செய்திகள்
விருத்தாசலம் தாசில்தார்

பால் பாக்கெட்டுகளை தலையில் சுமந்து சென்ற விருத்தாசலம் தாசில்தார்

Published On 2020-12-08 02:16 GMT   |   Update On 2020-12-08 02:16 GMT
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுப்பதற்காக பால் பாக்கெட்டுகளை தலையில் சுமந்து சென்ற விருத்தாசலம் தாசில்தார் பற்றிய புகைப்பட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக தர்ம நல்லூர், ஆலிச்சிக்குடி, கார்குடல், கம்மாபுரம், கருவேப்பிலங்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் குடியிருப்புகளை மழைவெள்ளம் சூழ்ந்தது. இதனால் அப்பகுதி கிராமங்களை சேர்ந்த குடும்பத்தினர் அந்தந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சாத்துக்கூடல் உச்சிமேடு கிராமத்தையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் கிராமத்திற்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

உணவு மற்றும் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவித்த அப்பகுதி மக்களுக்கு வருவாய்த்துறையினர் இடுப்பளவு தண்ணீரில் சென்று உணவு, பிஸ்கட் உள்ளிட்டவைகளை வழங்கி வருகின்றனர். மேலும் விருத்தாசலம் தாசில்தார் சிவக்குமார், இடுப்பளவு வெள்ளத்தில் தலையில் பால் பாக்கெட்டுகளை சுமந்தபடி சாத்துக்கூடல் உச்சிமேடு கிராமத்துக்கு கொண்டு சென்றார். இந்த புகைப்பட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Tags:    

Similar News