ஆன்மிகம்
சதுரகிரி

சதுரகிரி கோவில் நவராத்திரி விழாவில் பக்தர்களுக்கு தடை

Published On 2021-10-06 04:00 GMT   |   Update On 2021-10-06 04:00 GMT
பக்தர்கள் யாரும் தாணிப்பாறை மலை அடிவார பகுதிக்கும் வர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும், கோவில் நிர்வாகத்தின் சார்பாகவும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா விமரிசையாக 10 நாள் நடைபெறும்.

இதில் நவராத்திரி அன்று அம்பு விடும் நிகழ்ச்சி முக்கியமானதாகும். கொலு அலங்காரமும் முக்கியமானது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக இன்று (புதன்கிழமை) முதல் வருகிற 15-ந் தேதி வரை நவராத்திரி திருவிழாவிற்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினங்களில் நவராத்திரி சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அலங்காரங்கள் வழக்கம்போல் நடைபெறும் என விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார்.

மேலும் பக்தர்கள் யாரும் தாணிப்பாறை மலை அடிவார பகுதிக்கும் வர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகவும், கோவில் நிர்வாகத்தின் சார்பாகவும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News