செய்திகள்
கோப்பு படம்

திண்டுக்கல்-திருச்சி 4 வழிச்சாலையில் இலவச லேப்டாப் கேட்டு மாணவர்கள் சாலை மறியல்

Published On 2019-10-10 13:04 GMT   |   Update On 2019-10-10 13:04 GMT
திண்டுக்கல் - திருச்சி 4 வழிச்சாலையில் இலவச லேப்டாப் கேட்டு மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடமதுரை:

திண்டுக்கல் அருகே அய்யலூரில் உள்ள அரசு ஆண்கள் பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த வருடம் பிளஸ்-2 முடித்தவர்களுக்கு இன்று லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ஏராளமான மாணவர்கள் கல்லூரிக்கு விடுமுறை எடுத்து பள்ளிக்கு சென்றுள்ளனர்.

ஆனால் லேப்டாப் வழங்கப்படவில்லை. மேலும் முறையான பதிலும் கூறவில்லை. நீண்ட நேர காத்திருப்புக்கு பின்னர் மற்றொரு நாள் லேப்டாப் வழங்கப்படும் என ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் திண்டுக்கல் - திருச்சி 4 வழிச்சாலையில் கடவூர் பிரிவு அருகே திடீரென சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான வடமதுரை போலீசார் அவர் களுடன் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டனர். லேப்டாப் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் கலைந்து சென்றனர். போலீசார் விரைந்து வந்ததால் மறியல் செய்த மாணவர்களை உடனடியாக சமரசம் செய்து போக்குவரத்து பாதிக்காத வண்ணம் தவிர்த்தனர்.
Tags:    

Similar News