செய்திகள்
கொரோனா வைரஸ்

கிராம நிர்வாக அலுவலர் உள்பட 130 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-09-22 10:07 GMT   |   Update On 2020-09-22 10:07 GMT
நாமக்கல் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் உள்பட 130 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,263 ஆக உயர்ந்துள்ளது.
நாமக்கல்:

தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை நாமக்கல் மாவட்டத்தில் 4,133 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர், பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், பெண் கிராம நிர்வாக அலுவலர், பெண் ரேஷன் கடை ஊழியர், தனியார் வங்கி மேலாளர், பஸ் கண்டக்டர் மற்றும் அங்கன்வாடி பணியாளர் உள்பட 130 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,263 ஆக உயர்ந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை நாமக்கல், ராசிபுரம், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குருசாமிபாளையம் மற்றும் நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று அதிகரித்து இருந்தது.

இதற்கிடையே நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 192 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். நேற்றுவரை 61 பேர் பலியான நிலையில் 3,268 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 934 பேருக்கு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News