தொழில்நுட்பம்

ஏர்பாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் சாதனத்தை உருவாக்கும் ஆப்பிள்

Published On 2019-02-20 12:05 GMT   |   Update On 2019-02-20 12:05 GMT
ஆப்பிள் நிறுவனம் வயர்லெஸ் சார்ஜிங் வசதியை வழங்கும் இயர்பட் கேஸ்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருப்பது சமீபத்திய காப்புரிமைகளில் தெரியவந்துள்ளது. #Apple #wirelesscharging



அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் ஆப்பிள் பதிவு செய்திருக்கும் புதிய காப்புரிமைகளில் சார்ஜிங் வசதியை வழங்கும் இயர்பட் கேஸ் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. ஏர்பாட்ஸ் மற்றும் ஏர்பவர்கள் காப்புரிமையில் குறிப்பிடப்படவில்லை என்றாலும், வரைபடங்களை பார்க்கும் போது ஏர்பாட்ஸ் போன்ற வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் போன்று தெரிகிறது.

இது ஏர்பவர் சார்ஜிங் மேட் போன்று இயங்கும் என கூறப்படுகிறது. சார்ஜிங் மேட்களை கொண்டு வயர்லெஸ் முறையில் ஸ்மார்ட்போன் மற்றும் இதர சாதனங்களை சார்ஜ் செய்து கொள்ள முடியும்.  ஆப்பிள் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகளின் படி ஏர்பாட்ஸ் கேசை ஏர்பவர் சாதனத்தின் மேல் வைத்து சார்ஜ் செய்துகொள்ளலாம். 


புகைப்படம் நன்றி: uspto

ஏர்பாட்ஸ் போன்ற வயர்லெஸ் சார்ஜிங் கேஸ் உருவாக்குவதற்கென பல்வேறு காப்புரிமைகளை ஆப்பிள் பெற்றிருக்கிறது. 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஏர்பவர் மற்றும் கூடுதல் ஏர்பாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் சாதனங்களை அறிமுகம் செய்தது.

2018 ஆம் ஆண்டு இந்த சாதனம் விற்பனைக்கு வரும் என ஆப்பிள் அறிவித்திருந்த நிலையில், இவ்வாறு எதுவும் நடைபெறவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏர்பாட்ஸ் கடந்த ஆண்டு விற்பனைக்கு வரவில்லை என தகவல்கள் வெளியாகின. 

சமீபத்தில் வெளியான தகவல்களில் தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு விட்டதாகவும், விரைவில் இந்த சாதனம் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆப்பிள் நிறுவனம் மார்ச் 25 ஆம் தேதி விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இவ்விழாவில் அந்நிறுவனம் சந்தா முறையிலான செய்தி சேவையை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News