செய்திகள்
அமர்நாத் பனிலிங்கம்

42 நாட்கள் நடைபெறவுள்ள அமர்நாத் யாத்திரை ஜூன் 23ம் தேதி தொடக்கம்

Published On 2020-02-14 13:47 GMT   |   Update On 2020-02-14 13:47 GMT
அமர்நாத் குகைக்கோயிலில் தோன்றும் பனிலிங்கத்தை தரிசனம் செய்யும் இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 23-ம் தேதி தொடங்குகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு:

ஜம்மு-காஷ்மீரில் அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள்.

பயங்கரவாதிகள் அச்சுறுத்தலை தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக அமர்நாத் யாத்திரைக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை வரும் ஜூன் மாதம் 23-ம் தேதி தொடங்க உள்ளது என ஜம்மு ராஜ்பவன் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் கவர்னர் கிரீஷ் சந்திர முர்மு தலைமையில் 37-வது கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், இந்த ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் மாதம் 23-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 3-ம் தேதியுடன் யாத்திரை நிறைவடையும். அமர்நாத் யாத்திரை சுமார் 42 நாட்கள் நடைபெற உள்ளது என தெரிவித்தனர். 
Tags:    

Similar News