செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள்

லெஹங்கா ஆடைகளில் பதுக்கி 3 கிலோ போதைப் பொருள் கடத்த முயற்சி

Published On 2021-10-23 10:27 GMT   |   Update On 2021-10-23 12:20 GMT
பெங்களூரு போதைப் பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் அமித் கவாடே தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஏற்றுமதி செய்யப்பட இருந்த பார்சல்களை சோதனையிட்டனர்.
புதுடெல்லி:

பெங்களூருவில் இருந்து ஏற்றுமதி செய்ய இருந்த சரக்கு பார்சல்கள் மூலம் போதைப் பொருள் கடத்த இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு நேற்று முன்தினம் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பெங்களூரு போதைப் பொருள் தடுப்பு பிரிவு மண்டல இயக்குனர் அமித் கவாடே தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஏற்றுமதி செய்யப்பட இருந்த பார்சல்களை சோதனையிட்டனர். 

இதில், பெண்கள் அணியும் மூன்று லெஹங்கா ஆடைகளில் வெள்ளை நிற படிகப் பொருட்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று கிலோ எடையுள்ள இந்த 
போதைப் பொருளின்
 மதிப்பு கோடிக்கணக்கில் என்றும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தியதில், சம்பந்தப்பட்ட பார்சல் ஆந்திராவின் நரசபுரத்தில் இருந்து முன்பதிவு செய்யப்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

மேலும், இந்த விவரங்களை சென்னையில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவுக்கு பகிரப்பட்டு, பார்சல் முன்பதிவு செய்த ஆசாமியை பிடிக்க அதிகாரிகள் தீவிரம் காட்டினர். 

இந்நிலையில், பார்சலை அனுப்ப போலி முகவரி மற்றும் ஆவணங்கள் பயன்படுத்தி முன்பதிவு செய்த ஆசாமியை அதிகாரிகள் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News