தொழில்நுட்பம்
எல்.ஜி. ஜி8எக்ஸ் தின்க்

இந்தியாவில் புதிய எல்.ஜி. ஜி8எக்ஸ் தின்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்

Published On 2019-12-21 04:38 GMT   |   Update On 2019-12-21 04:38 GMT
எல்.ஜி. நிறுவனத்தின் ஜி8எக்ஸ் தின்க் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.



எல்.ஜி. நிறுவனம் இந்தியாவில் ஜி8எக்ஸ் தின்க் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பரில் நடைபெற்ற ஐ.எஃப்.ஏ. விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 

எல்.ஜி. ஜி8எக்ஸ் தின்க் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் விஷன் FHD+OLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு பை இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 13 எம்.பி. 136 டிகிரி சூப்பர் வைடு ஆங்கில் லென்ஸ், 12 எம்.பி. ஸ்டான்டர்டு சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 32 எம்.பி. செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

புதிய எல்.ஜி. ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் OLED FHD+ 2340x1080 பிக்சல் டிஸ்ப்ளேவுடன் கூடுதலாக 2.1 இன்ச் மோனோ கவர் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு நேரம், பேட்டரி விவரம், நோட்டிஃபிகேஷன் மற்றும் பல்வேறு பயனுள்ள அம்சங்களை இயக்க முடியும்.



எல்.ஜி. ஜி8எக்ஸ் தின்க் சிறப்பம்சங்கள்:

- 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் 19.5:9 FHD+ ஃபுல் விஷன் OLED டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர்
- அட்ரினோ 640 GPU
- 6 ஜி.பி. LPDDR4x ரேம்
- 128 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.8, 1.4µm பிக்சல், 78° லென்ஸ்
- 13 எம்.பி. அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.4, 1.0µm பிக்சல், 136° லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்
- 32 எம்.பி. செல்ஃபி கேமரா, f/1.9, 0.8μm பிக்சல், 79° லென்ஸ்
- இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810G சான்று
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4,000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- குவால்காம் குவிக் சார்ஜ் 3.0

எல்.ஜி. ஜி8எக்ஸ் தின்க் ஸ்மார்ட்போன் அரோரா பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 49,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News