செய்திகள்
கோப்புபடம்

லாரியின் பதிவு சான்றிதழை வைத்து மோசடி - வாலிபர் கைது

Published On 2021-11-29 07:19 GMT   |   Update On 2021-11-29 07:19 GMT
போலீசார் லாரியின் பதிவுச் சான்றிதழை வைத்து மோசடியில் ஈடுபட்ட கவின் குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பல்லடம்:

திருச்செங்கோட்டை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் கவின்குமார் (வயது 29).  இவர் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் பகுதியில் இயங்கிவரும் தனியார் குடிநீர் தயாரிப்பு நிலையத்தில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் அந்த நிறுவனத்தின் லாரியை லீசுக்கு எடுத்து பிற நிறுவனங்களுக்கும் தண்ணீர் சப்ளை செய்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் மாதப்பூரை சேர்ந்த கதிர் என்பவரிடம் லாரியின் பதிவு சான்றிதழை அடமானம் வைத்து ரூ.1 லட்சம் கடன் வாங்கி உள்ளார். கடன் மற்றும் வட்டி செலுத்தாததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கதிர் லாரியை எடுத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் குடிநீர் தொழிற்சாலை மேலாளர் வினித் (29) கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் லாரியின் பதிவுச் சான்றிதழை வைத்து மோசடியில் ஈடுபட்ட கவின் குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News