செய்திகள்
குற்றால அருவி

கனமழையால் வெள்ளப்பெருக்கு- குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை

Published On 2021-01-13 08:16 GMT   |   Update On 2021-01-13 08:16 GMT
குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி:

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 4 நாட்களாக தென்காசி மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது.

கடனாநதி அணை, ராமநதி அணை, குண்டாறு அணை ஆகியவை ஏற்கனவே நிரம்பிவிட்டதால் இந்த அணைகளுக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

குற்றாலம் மலை பகுதியில் பெய்த கன மழையால் மெயினருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து நேற்று காலையில் அந்த அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று மாலை முதல் மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களிலும், மேற்கு தொடர்ச்சி பகுதிகளிலும் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இரவிலும் மழை நீடித்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை அருவிகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயினருவியில் தண்ணீர் ஆர்ச்சை தாண்டி கொட்டுகிறது. பழைய குற்றாலத்திலும் தண்ணீர் ஆர்ப்பரித்த கொட்டுகிறத. இதனால் பாதுகாப்பு கருதி இன்று 2-வது நாளாக அந்த அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

இதேபோல் ஐந்தருவியின் 5 கிளைகளிலும், புலியருவியிலும் தண்ணீர் அதிகமாக விழுகிறது. குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News