செய்திகள்
தூத்துக்குடி செயின்ட் மேரீஸ் காலனியில் சாலைகளில் தேங்கிய மழைநீர்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விடிய விடிய சாரல் மழை

Published On 2021-11-25 05:03 GMT   |   Update On 2021-11-25 05:03 GMT
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று காலையும் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது.
நெல்லை:

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பருவமழை வழக்கத்தை விட அதிகளவில் பெய்து வருகிறது.

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால் நேற்று முதல் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. நேற்று மாலை தொடங்கிய சாரல் மழை இரவு முழுவதும் விட்டு விட்டு பெய்தது.

இன்று காலையும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. பகலிலும் சூரியனை பார்க்க முடியாதபடி கருமேகங்கள் சூழ்ந்து இருந்தன.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழையில் அதிகபட்சமாக சூரங்குடியில் 7 மில்லி மீட்டரும், திருச்செந்தூரில் 5 மில்லி மீட்டரும் பதிவாகி உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் அணை பகுதியில் மட்டும் 4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மற்ற இடங்களில் 2 முதல் 1 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்தது.

பாபநாசம் அணைக்கு இன்று காலை வினாடிக்கு 971 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 1,405 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 138.10 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 139.57 அடியாக உள்ளது.

மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 117 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 15 கன அடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது.

அணை நீர்மட்டம் 93.25 அடியாக உள்ளது. மற்ற அணைகளுக்கும் தண்ணீர் வரத்து சற்று குறைந்துள்ளது.

தாமிரபரணி ஆறு மற்றும் கிளை ஆறுகளில் வெள்ளம் சற்று குறைந்துள்ளது. கனமழை பெய்யாமல் சாரல் மழை மட்டும் பெய்து வருவதால் நெல்லை பகுதியில் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் வழக்கம் போல் ஓடுகிறது.

ஏராளமான பொதுமக்களும் தாமிரபரணி ஆற்றில் வழக்கம்போல் குளித்து வருகிறார்கள். குற்றால அருவிகளிலும் தண்ணீர் மிதமான அளவில் தண்ணீர் விழுகிறது.

நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

பாபநாசம்-4, பாளை-2, சேரன்மகாதேவி-1.6, களக்காடு-1.2., கன்னடியன் கால்வாய்-1, சேர்வலாறு-1, நாங்குநேரி-1, நெல்லை-0.4

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

சூரங்குடி-7, திருச்செந்தூர்-5, சாத்தான்குளம்-3.8, கீழஅரசடி-3, காயல்பட்டணம்-3, எட்டயபுரம்-2.8. குலசேகரப்பட்டினம்-2, காடல்குடி-2, வைப்பாறு-2, விளாத்திகுளம்-2, தூத்துக்குடி-0.3.




Tags:    

Similar News