செய்திகள்
கனமழை

நவம்பர் 29ல் உருவாகக்கூடிய புயலால் தமிழகத்தில் அதிக மழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

Published On 2020-11-26 18:18 GMT   |   Update On 2020-11-26 18:18 GMT
நவம்பர் 29-ம் தேதி உருவாகக்கூடிய புதிய புயலால் தமிழகத்தில் அதிக மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

வங்கக்கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடக்கும் போது பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை மற்றும் புயலால் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. புயல் கரையை கடந்துள்ளபோதும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
 
இதற்கிடையே, வங்கக்கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், வரும் 29-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளது.

அடுத்த 48-72 மணி நேரத்தில் தெற்கு வளைகுடாவில் புதிய குறைந்த அழுத்தம் உருவாகி மத்திய தமிழக கடற்கரையை நோக்கி நகரும்.

நிவர் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நவம்பர் 29 முதல் வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த அழுத்தப் பகுதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுவதால், மிக அதிக மழைப்பொழிவைப் பெற வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

நவம்பர் 29-ம் தேதி உருவாகக் கூடிய குறைந்த அழுத்தப் பகுதி தமிழகத்தில் அதிக மழை பெய்யக்கூடும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் இயக்குநர் ஜெனரல் மிருதுஞ்சய் மொஹாபத்ரா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News