உள்ளூர் செய்திகள்
நடவடிக்கை

சொத்துவரியை குறைக்க நடவடிக்கை

Published On 2022-05-07 09:47 GMT   |   Update On 2022-05-07 09:47 GMT
ராஜபாளையம் நகராட்சியில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
ராஜபாளையம்

ராஜபாளையம் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 சட்டமன்றத்தில் வைத்து ராஜபாளையம் நகராட்சி பகுதியில் சொத்து வரி உயர்வு குறித்து நான் கோரிக்கை மனு மூலம் அமைச்சர் கே.என்.நேரு கவனத்திற்கு கொண்டு சென்றேன். 

தமிழ்நாட்டில் உள்ள சிறப்பு நிலை நகராட்சி மற்றும் சென்னை மாநகராட்சியை விட ராஜபாளையம் நகராட்சியில் தான் சொத்து வரி  வீதம் 20.80%  (6 மாதம்) மற்றும் அடிப்படை வரி விகிதம் அதிகமாக உள்ளது என்பதை ஆதாரத்துடன் எடுத்து கூறினேன்.

அதற்கு  அமைச்சர்   தற்போதைய பொது சொத்து வரி சீராய்வு  நடவடிக்கை சமயத்தில் இதை கவனத்தில் கொண்டு உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுத்து நகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்படாத வகையில் சொத்து வரியை குறைக்க  நகராட்சிகளின் ஆணையாளர்  மூலம்  ஆலோசனை வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 

மேலும்  நகராட்சிகளின் ஆணையாளர்  பொன்னை யாவை   நான் நேரில்   சந்தித்தபோது  அமைச்சர்  ராஜபாளையம் நகராட்சிக்கு தக்க ஆலோசனைகள் வழங்கி  மற்ற சிறப்பு நிலை நகராட்சியில் உள்ளது போல் சொத்து வரி விதிப்பை சரி செய்ய வேண்டி தொலை பேசியில் தெரிவித்ததை அடுத்து நகராட்சி நிர்வாக செயலாளருக்கு அறிக்கை சமர்பித்து நடவடிக்கை எடுக்கப்படும்  என கூறினார். 

எனவே சொத்துவரி குறைக்கப்பட்ட விபரம் விரைவில் வந்து சேரும் என்பதை ராஜபாளையம் நகர் மக்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News