செய்திகள்
வெடிகுண்டு தாக்குலில் கருகிய வாகனங்கள்

சிறைச்சாலையில் பயங்கரவாதிகள் தாக்குதல் -1800 கைதிகள் தப்பி ஓட்டம்

Published On 2021-04-06 08:26 GMT   |   Update On 2021-04-06 08:26 GMT
துப்பாக்கி ஏந்திய நபர்கள் ஒரே நேரத்தில் பல அரசு கட்டிடங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தினார்கள்.

அபுஜா:

மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான நைஜீரியாவில் அரசை எதிர்த்து பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நைஜீரியாவில் உள்ள சிறையில் பயங்கரவாதிகள் திடீரென்று தாக்குதல் நடத்தி உள்ளனர்.

அந்த நாட்டின் தென் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள போலீஸ், ராணுவ கட்டிடங்கள் மற்றும் சிறைச் சாலையை குறி வைத்து துப்பாக்கியால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினார்கள்.

துப்பாக்கி ஏந்திய நபர்கள் ஒரே நேரத்தில் பல அரசு கட்டிடங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தினார்கள்.

சிறையில்  நடத்திய தாக்குதலை பயன்படுத்தி 1,800-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடிவிட்டார்கள்.

அதன்பின் பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

ஆனால் பிரிவினைவாதிகள் மீது நைஜீரிய காவல்துறை ஜெனரல் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து நைஜீரிய சிறைச்சாலையின் செய்தித் தொடர்பாளர் பிரான்சிஸ் ஏனோபர் கூறியதாவது:-

தாக்குதல் நடத்தியவர்கள் கனகர ஆயுதங்களுடன் வந்தனர். எந்திர துப்பாக்கி முதல் ராக்கெட் செலுத்தும் கையெறி குண்டுகள் வரை அனைத்தையும் வைத்திருந்தனர்.

அவர்கள் போலீஸ் தலைமையகத்தில் அமைந்துள்ள ஆயுத கிடங்கை அடைந்து ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக தாக்குதல் நடத்தி உள்ளனர். ஆனால் அது முறியடிக்கப்பட்டது.

சிறையில் இருந்து தப்பிய கைதிகளை மீண்டும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்றார்.

Tags:    

Similar News