செய்திகள்
கொரோனா வைரஸ்

மதுரை அரசு மருத்துவமனையில் பெண் துப்பரவு பணியாளர் கொரோனாவுக்கு பலி

Published On 2021-05-31 07:29 GMT   |   Update On 2021-05-31 07:29 GMT
உயிரிழந்த ஒப்பந்த பணியாளர் மாரிராணிக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி சக தூய்மைப் பணியாளர்கள் மருத்துவமனை வளாகம் முன்பு திரண்டனர்.
மதுரை:

கொரானா வைரஸ் தொற்று 2-ம் அலை நாடு முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், முன்களப் பணியாளர்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் பணியாற்றி வருகின்றனர்.

மதுரை அரசு கொரானா மருத்துவமனையில் ஆயிரக் கணக்கான கொரானா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு மதுரை மட்டுமன்றி தென் மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1400-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் முன்களப் பணியாளர்கள் அவ்வப்போது நோய் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர்.

கொரானா சிறப்பு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்த மதுரை புதூர் பகுதியை சேர்ந்த மாரிராணி என்பவர் கொரானா தொற்று பாதிக்கப்பட்டு, கடந்த சில நாட்களாக சிகிச்சையில் இருந்த போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து உயிரிழந்த ஒப்பந்த பணியாளர் மாரிராணிக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தி சக தூய்மைப் பணியாளர்கள் மருத்துவமனை வளாகம் முன்பு திரண்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்

அப்போது போதிய நிவாரணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மற்ற ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News