செய்திகள்
கோப்புப்படம்.

மோதலை தடுத்து நிறுத்திய வாலிபர் கொலை - சிறுவர்கள் உள்பட 3பேர் கைது

Published On 2021-07-19 12:49 GMT   |   Update On 2021-07-19 12:49 GMT
10-ம்வகுப்பு மாணவனான கிஷோர் நேற்று அப்பகுதியை சேர்ந்த அவனது நண்பன் 11-ம் வகுப்பு படிக்கும் தருண் என்பவருடன் செல்போனில் விளையாடி கொண்டிருக்கும் போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
பல்லடம், ஜூலை:

திருப்பூர் மாவட்டம் பல்லடம்  அருகே உள்ள வீரபாண்டி திருவள்ளுவர் நகரை சேர்ந்த திலகர் மகன் பிரவீன் (வயது 20). பனியன் தொழிலாளி. நேற்று  கெம்பே நகரில் வசிக்கும் நண்பனை பார்க்க பிரவீன் சென்றார்.


நண்பருடன் பேசி கொண்டிருக்கும் போது அருகில் செல்போன் மூலம் விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் சிலர்  மோதலில் ஈடுபட்டனர். 

அதனை பிரவீன் தடுத்து நிறுத்தினார்.இதனால் ஆத்திரமடைந்த 3 சிறுவர்கள் எங்களை எப்படிதட்டிக்கேட்கலாகம் என  பிரவீனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த சிறுவர்களில் ஒருவன் மறைத்து வைத் திருந்த கத்தியை எடுத்து பிரவீன் வயிற்றில் குத்தி விட்டு தப்பியோடிவிட்டான்.  

இதில் பலத்த காயமடைந்து மயங்கிய பிரவீனை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து  பல்லடம் போலீசார்  விசாரணை நடத்தி  பிரவீனை குத்திக்கொன்ற சிறுவர்கள் யாரென்று விசாரணைநடத்தினர்.விசாரணையில் அவர்கள் வீரபாண்டி கெம்பேநகரை சேர்ந்த  கிஷோர் (15), யூசப்(17), மற்றும் கார்த்திக்(21) என்பது தெரியவந்தது. இதையடுத்து  3பேரையும் போலீசார் கைது செய்தனர்.

10ம்வகுப்பு மாணவனான கிஷோர் நேற்று அப்பகுதியை சேர்ந்த அவனது நண்பன் 11&ம் வகுப்பு படிக்கும் தருண்(16) என்பவருடன்  செல்போனில் விளையாடி கொண்டிருக்கும் போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதில்  தருண், கிஷோரை மிரட்டவே  ஆத்திரமடைந்த  கிஷோர் தனது நண்பர்களான  யூசப், கார்த்திக் ஆகி யோரை அழைத்து வந்து  தருணிடம் வாக்கு வாதத்தில்  ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த பிரவீன்  மோதலை தடுத்து நிறுத்திய போது கிஷோர், யூசப், கார்த்திக் ஆகியோர்  பிரவீனிடம் தட்டிக்கேட்டுள்ளார். 

மேலும் ஆத்திரத்தில் கார்த்திக் தான் வைத்திருந்த கத்தியால் பிரவீனை வயிற்றில் குத்திக் கொன்றார். கைதான  கிஷோர், யூசப் ஆகியோர் பொள்ளாச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளி சிறையில் அடைக்கப்பட்டனர். கார்த்திக் திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.  

Tags:    

Similar News