தொழில்நுட்பம்
ஒரிஜின் ஒஎஸ்

புதிய யுஐ மற்றும் அம்சங்களுடன் விவோ ஒரிஜின் ஒஎஸ் அறிமுகம்

Published On 2020-11-19 06:48 GMT   |   Update On 2020-11-19 06:48 GMT
விவோ நிறுவனம் புதிய ஒரிஜின் ஒஎஸ் இயங்குதளத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


விவோ நிறுவனம் ஆண்ட்ராய்டு தளத்தை சார்ந்து இயங்கும் ஒரிஜின் ஒஎஸ்-ஐ அறிமுகம் செய்து உள்ளது. இது அந்நிறுவனத்தின் பன்டச் ஒஎஸ்-ஐ விட மேம்பட்ட இயங்குதளம் ஆகும். 

புதிய ஒஎஸ் பயனர் தேவை மற்றும் எதிர்பார்ப்புகளை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டு இருப்பதாக விவோ தெரிவித்து உள்ளது. தற்போதைய சூழலில் பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் சவால்களை சரி செய்யும் வகையில், சிறப்பான வடிவமைப்பு, சீராக இயங்கும் வகையில் இந்த ஒஎஸ் தயாராகி இருக்கிறது.



ஒரிஜின் ஒஎஸ் தளத்தில் டெஸ்க்டாப் சிஸ்டம் மாற்றப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஐகான்கள் மாற்றப்பட்டு எளிய வடிவமைப்பு கொண்டுள்ளது. ஒரிஜின் ஒஎஸ் வேகமாகவும், சீராகவும் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய அனிமேஷன்கள் மற்றும் பீட்பேக் உள்ளிட்டவை இயற்கையை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளது. இது மொபைல் போன்களில் நிஜமாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் என விவோ தெரிவித்து உள்ளது. விவோ ஒரிஜின் ஒஎஸ் வழங்கப்படும் சாதனங்கள் பற்றிய விவரங்கள் விவோ டெவலப்பர் நிகழ்வில் அறிவிக்கப்பட இருக்கிறது.
Tags:    

Similar News