அழகுக் குறிப்புகள்
நகங்கள் உடையாமல் பராமரிக்க எளிய வழிமுறைகள்

நகங்கள் உடையாமல் பராமரிக்க எளிய வழிமுறைகள்

Published On 2022-05-03 07:31 GMT   |   Update On 2022-05-03 07:31 GMT
உடல் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கும் கண்ணாடியாக நகங்கள் விளங்குகின்றன. அவற்றை சீராக பராமரிப்பதற்கான வழிகளை இங்கே பார்க்கலாம்.
நகங்கள் நன்றாக வளர்வதற்கும், வலிமையாக இருப்பதற்கும் இரும்புச்சத்து கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

வீட்டு வேலைகள் செய்யும் போது நகங்கள் உடைவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் நகங்களை நீளமாக வளர்ப்பதை தவிர்க்கலாம். கைகளை அடிக்கடி குளிர்ந்த நீரால் கழுவுவதன் மூலம் நகங்களை தூய்மையாக பராமரிக்கலாம்.

நகங்கள் பளபளப்புடன் இருப்பதற்கு..

மல்லிகை பூவின் இதழ்களை அவ்வப்போது நகங்கள் மீத தேய்த்து வந்தால் அவை பளபளப்பாகும்.

ஒரு பாத்திரத்தில் இளஞ்சூடான நீரை எடுத்துகொள்ளவும். அதில் சிறிதளவு திரவ சோப்பு அல்லது ஷாம்பு, 2 தேக்கரண்டி எலுமிச்சசம் பழச்சாறு, அரை தேக்கரண்டி உப்பு போன்றவற்றை சேர்த்து நன்றாக கலநது கொள்ளவும். இந்த கரைசலில் கைகளை 15 நிமிடங்கள் வரை மூழ்கி இருக்குமாறு வைக்கவும்.

பின்பு நகங்களின் இடுக்குகளில் மென்மையான பிரஷ் கொண்டு தூய்மைப்படுத்தவும். இதன் மூலம் அழுக்குகள் இறந்த செல்கள் போன்றவை நீங்கும். இவ்வாறு மாதத்திற்கு இரண்டு முறை செய்து வரலாம்.

அடிக்கடி விரல்கள் மற்றும் நகங்களின் மீது தேங்காய் எண்ணெய் தடவி மென்மையாக மசாஜ் செய்து வரலாம்.

தரமற்ற நகப்பூச்சுகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நகப்பூச்சை அகற்றுவதற்கு உபயோகப்படுத்தும் திரவத்தில் சிறிதளவு கிளிசரின் கலந்து பயன்படுத்தலாம்.

கைகளை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதன் மூலம் நகங்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். இதற்காக ரசாயனங்கள் கலந்த கிரீம்களுக்கு பதிலாக வீட்டிலேயே இயற்கையான முறையில் கிரீம் தயாரித்து பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்

3 தேக்கரண்டி ஷியா வெண்ணெய், 3 தேக்கரண்டி கற்றாழை ஜெல், 2 தேக்கரண்டி வைட்டமின் ஈ எண்ணெய், 2 தேக்கரண்டி பாதாம் எண்ணெய், 3 தேக்கரண்டி மரவள்ளிக்கிழங்குத்தூள் ( ஆரோரூட் பொடி) விருப்பமான நறுமண எண்ணெய் 1 தேக்கரண்டி

செய்முறை

ஒரு கண்ணாடி பாத்திரத்தில் ஷியா வெண்ணெய் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும். பின்பு மேலே குறிப்பிட்டுள்ள எண்ணெய்களை ஒவ்வொன்றாக ஊற்றி கலக்கவும். சிறிது நேரத்தில் அந்த கலவை கிரீம் பதத்திற்கு வரும். கடைசியாக அதில் கற்றாழை ஜெல் மற்றும் மரவள்ளிக்கிழங்கு தூளை சேர்த்து கலக்கவும். இந்த கிரீமை காற்று புகாத கண்ணாடி ஜாடியில் சேமித்து உபயோகிக்கலாம்.

இதை கைகளுக்கும், நகங்களுக்கும் பூசலாம். இந்த கிரீம் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். இதை குளிர்சாதனபெட்டியில் வைக்காமல் அறையின் வெப்ப நிலையிலேயே வைத்து பயன்படுத்தலாம்.
Tags:    

Similar News